திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன்(69) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
பாடகி உமா ரமணன்
பிரபல பின்னணி பாடகியான உமா ரமணன் கடந்த 1980ம் ஆண்டு நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடல் மூலம் பாடகியாக திரையுலகில் அறிமுகமானார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த நிலையில், தீபன் சக்ரவர்த்தியுடன் இணைந்து இப்படத்தில் அந்த பாடலை பாடியுள்ளார்.
கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, பன்னீர் புஷ்பங்கள், முதல் வசந்தம், ஒரு கைதியின் டைரி, புதுமைப் பெண், தென்றலே என்னை தோடு, திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் உமா ரமணன் பின்னணி பாடல் பாடியுள்ளார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த உமா ரமணன் நேற்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |