இளைஞரொருவரை காவு வாங்கிய துணிவு திரைப்படம்! பரபரப்பில் ரசிகர்கள்..
பொங்கல் தினத்தை ஒட்டி வெளியான திரைப்படத்தினை பார்வையிட சென்ற இளைஞரொருவர் லொறியலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரமாண்ட திரைப்படங்கள்
நேற்றைய தினம் பொங்கல் தினத்தையோட்டி விஜய் மற்றும் அஜித் நடிப்பில் வாரிசு, துணிவு என்ற பிரமாண்ட திரைப்படங்கள் இரண்டு வெளியானது.
இதில் தெலுங்கு பிரபலங்கள் மற்றும் பிரபல்யமான சில பிரபலங்கள் என பலரின் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படங்களை பார்வையிடுவதற்கு நேற்றைய தினம் உலகம் முழுவதும் ரசிகர்கள் படையெடுத்தார்கள்.
இந்நிலையில் நேற்றைய தினம் சென்னையில் உள்ள பிரபல திரை அரங்கில் ரசிகர்கள் கூடி நடனமாடியும் உற்சாகமாக திரைப்பட வெளியானதைக் கொண்டியுள்ளார்கள்.
இளைஞரொருவர் மரணம்
அப்போது பரத்குமார் என்ற இளைஞரொருவர் துணிவு படத்தை பாரக்க வந்துள்ளார். இதன் போது அங்கிருந்த லொறியில் மேல் ஆட முயற்சித்த போது கால் தவறி கீழே விழுந்துள்ளார்.
இதனை தொடர்ந்து கீழே விழுந்த அஜித் ரசிகரை மற்றைய ரசிகர்கள் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். அப்போது இவரின் பின்னாலிருக்கும் முதுகு பகுதியில் பலமாக அடிப்பட்டிருந்தால் குறித்த இளைஞர் உயிரிழ்ந்துள்ளார்.
இந்த தகவல் நேற்றைய தினம் திரைப்படம் பார்க்கச் சென்ற அனைத்து ரசிகர்களையும் துயரில் ஆழத்தியுள்ளது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து அஜித் சார்பில் எந்தவிதமான தகவலும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.