நாள்பட்ட மலச்சிக்கலுக்கு தீர்வு வேண்டுமா? இந்த உணவுகளை இனிமேல் தவிர்க்காதீங்
பொதுவாகவே தற்காலத்தில், அதிகரித்த துரித உணவுகளின் நுகர்வு, அமர்ந்தபடியே மணிக்கணக்கில் வேலை பார்ப்பது, தவறான வாழ்ககை முறை பழக்கங்கள், போதிய உடற்பயிற்சியின்மை போன்ற பல்வேறு விடயங்கள் மலச்சிக்கலுக்கு காரணமாக அமைகின்றது.
மலச்சிக்கல் பிரச்சனையால் பெரும்பாலானோர் அவதியடைந்து வருகின்றனர்.இது ஒரு சங்கடமான மற்றும் விரக்தியான அனுபவம் என்றாலும் இதனை சரிசெய்வதற்கு மருந்து தேவையில்லை.
இயற்கை வைத்தியங்களில் சிலவற்றை நமது அன்றாட வழக்கத்தில் சேர்த்தாலே வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவித்து மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வை பெற முடியும்.
அந்தவகையில் மலச்சிக்களுக்கு இயற்கை முறையில், தீர்வு கொடுக்ககூடிய சில உணவுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
பச்சை பட்டாணி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில்,பெரும் பங்கு வகிக்கின்றது.100 கிராம் பச்சை பட்டாணியில் சுமார் 5.1 கிராம் அளவுக்கு நார்ச்சத்து காணப்படுகின்றது.
அதனால் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினசரி உணவில் பச்சை பட்டாணியை சேர்த்துக்கொள்வது சிறந்த பலனை கொடுக்கும்.
பச்சை பட்டாணி
பச்சை பட்டாணி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில்,பெரும் பங்கு வகிக்கின்றது.100 கிராம் பச்சை பட்டாணியில் சுமார் 5.1 கிராம் அளவுக்கு நார்ச்சத்து காணப்படுகின்றது.
அதனால் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினசரி உணவில் பச்சை பட்டாணியை சேர்த்துக்கொள்வது சிறந்த பலனை கொடுக்கும்.
சுரைக்காய்
பெரும்பாலானவர்களால், சுவையில் கம்மியாக இருப்பதால் ஒதுக்கப்படும் சுரைக்காய் குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்படுகின்றது.
100 கிராம் சுரைக்காயில் தோராயமாக 1.2 கிராமளவுக்கு நார்சத்து காணப்படுகின்றது. அது செறிமான சிக்கல்கள்களுக்கு தீர்வு கொடுப்பதுடன், மலச்சிக்கலை குணப்படுத்துவதிலும் ஆற்றல் காட்டுகின்றது.
பீட்ருட்
செறிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதிலும் ரத்தத்தை சுத்திகரிப்பதிலும் ஆற்றல் காட்டும் பீட்ரூட்டி ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கின்றது.
வெறும் 100 கிராம் பீட்ரூட்டில் 2.8 கிராம் நார்ச்சத்து செரிந்துள்ளதால் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வை கொடுக்கும்.
பாகற்காய்
100 கிராம் பாகற்காயில், 2.6 கிராம் அளவுக்கு நார்ச்சத்து காணப்படுவதால், இது செரிமானத்தை சீராக பேணுவதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது.
இது மலச்சிக்கலை குணப்படுத்துவதுடன், உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
