ஒரே ஆபாசப்பேச்சுகள்... எல்லை மீறும் பிக் பாஸ் போட்டியாளர்களால் வெடித்த சர்ச்சைகள்! இது தான் உண்மை முகமா?
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரம் ஒளிபரப்பாகி வரும் நிலையில், அதில், ஏகப்பட்ட ஆபாசப் பேச்சுக்கள், பெண்களை இழிவாக பேசுதல் என பல விஷயங்கள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து வருகின்றன.
பிரஸ் மீட்டில் செலிபிரிட்டியாக சுரேஷ் சக்கரவர்த்தி அமர்ந்திருக்க, அவருக்கு எதிரான கேள்வியை தாமரை கேட்க தாத்தா கோபத்தின் உச்சிக்கே சென்று விடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
படுக்கையறை, பாத்ரூம் பகுதி, ஸ்மோக்கிங் ரூம் என போட்டியாளர்கள் ஒவ்வொரு இடத்திலும் செய்யும் செயல்கள் எந்தவொரு எடிட்டும் செய்யப்படாமல் இருக்கும் நிலையில், பிரபலங்களின் நடத்தை இப்படி இருக்கிறதே என்கிற கேள்விகளும் புகார்களும் கிளம்பி உள்ளன.

ஒடிடி தளத்தில் சென்சார் இல்லை என்பதால் அவர்கள் அடிக்கும் கூத்துக்களுக்கு எந்தவொரு கடிவாளமும் இன்றி காட்டப்படுகிறது.
5வது சீசனை போல ஆரம்பத்திலேயே கடந்து வந்த பாதை டாஸ்க்கை கொடுத்து அழுகாச்சி டிராமாவை நடத்தாமல் முதல் டாஸ்க்கே பிரஸ் மீட் டாஸ்க் கொடுத்து அதிரடியாக பிக் பாஸ் அல்டிமேட்டை ஆரம்பித்துள்ளனர். எப்படியாவது ஒடிடி பக்கம் ரசிகர்களை ஈர்த்து விட வேண்டும் என மெனக்கெட்டு வருவது தெளிவாக தெரிகிறது.

சில போட்டியாளர்களை வீக்கென நினைத்துக் கொண்டு இருக்கும் சில போட்டியாளர்கள் மற்றவர்களை டாமினேட் செய்வது போல அதிகாரம் செலுத்துவது போல பேசுவதும் பிக் பாஸ் வீட்டில் அதிகமாக இடம்பெற்று வருகிறது.
ஒரு மணி நேர ஷோ என்றால் இவர்கள் பண்ணும் அட்டகாசம் எல்லாம் மறைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகளவில் பிக் பாஸ் போட்டியாளர்கள் எக்ஸ்போஸ் ஆகி வருகின்றனர்.

தாமரை செல்வி போலவே மற்ற போட்டியாளர்களும் பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க்கையே புரிந்து கொள்ளாமல் ஐக்யூ லெவல் குறைவானவர்களை போல விளையாடி வருவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
எந்தவொரு டாஸ்க் கொடுத்தாலும், அதற்கு நேர் எதிராகவே செயல்படுவதையே போட்டியாளர்கள் செய்து வருகின்றனர் என்றும் பிரஸ்மீட் டாஸ்க்கை பலரும் கையாண்ட விதம் இவர்கள் ஏன் இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள்? என்கிற கேள்வியை எழுப்புகிறது என்றும் திட்டி வருகின்றனர்.
