புளித்த உணவுகள் சாப்பிட்டால் புற்றுநோய் வராதா? மருத்துவ விளக்கம்
புளிக்க வைக்கபட்டு நொதிக்க விடப்பட்டு செய்யப்படும் உணவுகளில் உடலுக்கு நன்மை இருக்கிறதா என்பதை மருத்துவர் விளக்குறார்.
புளிக்க வைக்கப்பட்ட உணவுகள்
தற்போது மக்கள் குடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆரோக்கியமான குடல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.
நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களுக்கு இடையில் சமநிலை இருக்கும்போது குடல் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது. மக்கள் பெரும்பாலும் குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வதைத் தேர்வு செய்கிறார்கள்.
ஆனால் இந்த பாக்டீரியாக்களுக்கு இடையிலான சமநிலையை நீங்கள் இயற்கையாகவே பராமரிக்க முடியும். இதற்கு சப்ளிமெண்ட்டுகள் தேவை இல்லை.
நொதித்தல் என்பது பழங்காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள உணவு மற்றும் பானங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு பழங்கால நுட்பமாகும்.
பழங்கால மக்கள் இப்படி உணவுகளை சாப்பிட காரணம் பல அறியப்பட்டாலும் உண்மையில் இது உடலுக்கு பல நன்மைகளை தருகின்றது.

புளித்த உணவுகள்
நொதித்தல் செயல்முறை மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுகள் புளித்த உணவுகள் எனப்படுகின்றது.
பொதுவாக தயிர், தோசை, இட்லி, சீஸ், போன்ற இன்னும் பல உணவுகள் ஆகும். இவை குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஒவ்வொரு நாளும் உங்கள் உணவில் ஒரு சில புளித்த உணவுகளைச் சேர்ப்பது உங்கள் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மற்றும்
புற்றுநோய் போன்ற கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்கள் உட்பட பல நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் என கூறப்படுகின்றது.

நன்மைகள்
இதுபோன்ற உணவுகள் சாப்பிட்டால் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், பெருங்குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும் என மருத்துவ நிபுணர் கூறுகிறார்.
அதிலும் பெருங்குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைக்க விரும்பினால் உங்கள் உணவு பட்டியலில் புளித்த உணவை சேத்து கொள்வது நல்லது.
இந்த உணவுகள் மிகவும் உளிமையாக செய்யலாம். வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிப்பது தானாகவே கெட்ட பாக்டீரியாக்களைக் குறைக்கிறது. புளித்த உணவுகள் சாப்பிட்டால் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |