தொப்பையை மாயமாய் மறைக்கும் வெந்தயம்.. டீயில் போட்டு குடிக்கலாமா?
பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்கள் அதிக எடையாலும், அளவில்லாத தொப்பையாலும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு பிரச்சினைகள் எழும் போது மருந்து வகைகளில் மாத்திரைகள் என செல்லாமல் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு முயற்சித்தால் கண்டிப்பாக சிறந்த பலனை எதிர்பார்க்கலாம்.
அந்த வகையில் எடை அதிகரிப்பு, தொப்பை இவை இரண்டிற்கும் ஒரே தீர்வாக வெந்தயம் பார்க்கப்படுகின்றது.
காலையில் வெறும் வயிற்றுடன் வெந்தயம் கலந்த டீ அல்லது தண்ணீர் குடித்து வந்தால் ஏகப்பட்ட நோய்கள் குணமாகும் என மருத்துவ தகவல்கள் கூறுகின்றன.
இதன்படி, தொப்பைக்கும் வெந்தயத்திற்கு என்ன தொடர்பு என்பதனை தெளிவாக பார்க்கலாம்.
வெந்தய டீ குடிக்கலாமா?
1. காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக வெந்தயத்தை எடுத்து கொதி நீரில் போட்டு சரியாக 20 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.
2. நன்றாக ஊறிய பின்னர் வெந்தயத்துடன் தண்ணீரை குடிக்கவும். இப்படி செய்தால் ஒரே மாதத்தில் சிறந்த பலனை எதிர்பார்க்கலாம்.
3. தேவையற்ற கொழுப்புக்களை குறைத்து கொலஸ்ட்ராலை கட்டுபடுத்தும் ஆற்றல் வெந்தயத்திற்கு அதிகமாக உள்ளது. இதனால் வெந்தய தண்ணீர் தாராளமாக குடிக்கலாம்.
4. சர்க்கரை வியாதியுள்ளவர்கள் சாப்பாட்டில் அதிகம் கட்டுபாட்டுடன் இருப்பார்கள். வெந்தய தண்ணீரை காலையில் டீயிற்கு பதிலாக குடித்து வந்தால் அமினோ ஆசிட் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்க உதவியாக இருக்கின்றது.
5. காலையில் இது போன்ற திரவங்களை எடுப்பதால் மலம் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் வெளியேறுகின்றது. அத்துடன் மூல நோயாளர்களும் இந்த ரெமடியை பின்பற்றலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |