தினமும் ஒரு டம்ளர் சோம்பு பால் எடுத்துக்கோங்க.. கண்கூடாக தெரியும் மாற்றம்
சமையலறையில் முக்கிய பொருளாக இருக்கும் சோம்பு பல ஆரோக்கிய நன்மையை அளிக்கின்றது. குறிப்பாக சோம்பு பால் குடிப்பதன் மூலம் பல ஆச்சரிய நன்மையை பெற முடியும்.
தேவையான பொருட்கள்
பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
பால் - ஒரு டம்ளர்
செய்முறை
கடாயில் பால் மற்றும் அரை டீஸ்பூன் சோம்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, பின்னர் வடி கட்டவும்.
பின்பு சுவைக்கு ஏற்ப சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.
பயன்கள் என்ன?
செரிமானத்தை மேம்படுத்த சோம்பு பால் அதிகமான உதவி செய்வதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் இதில் அத்தியாவசிய எண்ணெய் இரைப்பை நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் செய்கின்றது. இந்த பாலில் கால்சியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் ஆகியவை உள்ளது. இவை எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
இரும்புச்சத்து குறைபாட்டை தடுப்பதுடன் ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கின்றது. பெண்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சினை இந்த இரும்புச்சத்து குறைபாடு ஆகும். சோம்பில் இரும்பு மற்றும் பொட்டாசியம் காணப்படுவதால் இந்த பிரச்சினைக்கு தீர்வும் கிடைக்கின்றது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |