ஆணாக மாற பெண் போலீசுக்கு அனுமதி: வெளியான உண்மை சம்பவம்
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பெண்ணில் இருந்து ஆணாக மாற போலீஸ் அதிகாரி ஒருவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கிடைக்ககூடிய உரிமைகள் பற்றி அவ்வப்போது குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
மூன்றாம் பாலினத்தவர்களையும் சாதாரண குடிமக்கள் போன்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழாமல் இல்லை.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு ஆணாக மாற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் பெண் காவலர் ஒருவர் தான் ஆணாக மாற வேண்டும் என அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்திருந்தார்.
இதன் அடிப்படையில் அவரின் கோரிக்கையை ஏற்ற மாநில உள்துறை அமைச்சகம், அவரின் விருப்பப்படி, பாலினத்தை மாற்ற மாநில டி.ஜி.பி.,க்கு அனுமதி வழங்கப்பட்ட உள்ளது.
இதுதொடர்பாக, உள்துறையின் கூடுதல் தலைமை செயலர் டாக்டர் ராஜேஷ் ரஜோரா, சிறு வயதில் இருந்தே அந்த பெண் கான்ஸ்டபிள், தன் பாலினத்தை அடை யாளம் காண முடியாத பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றத்தை உளவியலாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அந்த பெண் காவலர், ஆண் காவலர் போன்று அனைத்து விதமான பணிகளையும் துரிதமாகவும், எளிதாகவும் செய்து விடுவதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக, அவர் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, அவரின் விருப்பப்படி, பாலினத்தை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.