Viral Video: ராட்சத பெண் அனக்கோண்டாவின் வாயிலிருந்து மற்றொரு அனக்கோண்டாவா?... புல்லரிக்க வைக்கும் காட்சி
ராட்சத பெண் அனக்கோண்டாவின் வாயிலிருந்து மற்றொரு அனக்கோண்டா வெளிவரும் காட்சி பார்வையாளர்களை புல்லரிக்க வைத்துள்ளது.
அனக்கோண்டா
அனக்கோண்டா பாம்பு தென் அமெரிக்கா நாடுகளில் நீர்நிலைகளிலும், சதுப்பு நிலங்களிலும் வாழும் மிகப்பெரிய பாம்பினத்தில் ஒன்றாகும்.
சாதாரண பாம்பைக் கண்டாலே அலறும் மக்களுக்கு மத்தியில் தற்போது அனக்கோண்டா பாம்புகளின் காட்சி அதிகமாகவே உலாவருகின்றது.
இவை குறிப்பாக அமேசான் ஆறு போன்ற இடங்களில் அதிகமாக வாழும் நிலையில், நான்கு வகையான அனக்கோண்டா பாம்புகள் காணப்படுகின்றது.
பச்சை மற்றும் மஞ்சள் அனக்கோண்டா, உடலில் கரும்புள்ளிகளைக் கொண்ட அனக்கோண்டா, பொலிவியின் அனக்கோண்டா என காணப்படுகின்றது.
அதிர்ச்சி காட்சி
இங்குள்ள காணொளி ஒன்றில் ராட்சத பெண் அனக்கோண்டா ஒன்று நீர்நிலையின் ஓரத்தில் படுத்திருக்கின்றது. இதன் வாயிலிருந்து மற்றொரு அனக்கோண்டாவை வெளியே எடுக்கின்றது.
சில நொடிகளில் வாயிலிருந்து வெளிவந்த அனக்கோண்டா எந்தவொரு காயமும் இல்லாமல் அசால்டாக ஊர்ந்து செல்லும் காட்சியினையும் பார்க்க முடிகின்றது.
அனக்கோண்டா வகையான பாம்புகள் தனிமையில் இருந்து முடித்த பின்பு தனது துணையான ஆண் அனக்கோண்டா பாம்பை விழுங்கிவிடுவதாக கூறப்படும் நிலையில், இக்காட்சி அவ்வாறான ஒரு சம்பவமாக இருக்குமா என்ற கேள்வியும் பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.
Female anaconda regurgitating another anaconda pic.twitter.com/E0WqfrEkXR
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) August 6, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
