ஐபோன்களில் வாட்ஸ்அப் மெஸேஜ்களை எவ்வாறு திகதிவாரியாக தேடுவது?
வாட்ஸ்அப்பில், மெஸேஜ்களை திகதி அடிப்படையில் தேடும் அம்சத்தை ஐபோன்களில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து நாம் இன்று தெரிந்துகொள்வோம்.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் நிறுவனம் பயனர்களுக்கு கூடுதல் நலன்களை வழங்கும் நோக்கில் பல்வேறு பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
அன்ராய்ட் மற்றும் ஐபோன்களில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் பரீட்சார்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வொயிஸ் ஸ்டேடஸ் அப்டேட், சோர்ட்கட் புளொக்கிங், குருப்களில் கான்டக்ட் சோர்ட்கட் போன்ற அம்சங்களை உதாரணமாக கூற முடியும்.
திகதி அடிப்படையில் அனுப்பிய மெஸேஜ் ஒன்றை தேடுவது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையக் கூடும்.
WhatsApp beta for iOS 22.24.0.77. என்னும் வேர்சனை பயன்படுத்தும் பயனர்களுக்கு திகதி அடிப்படையில் மெஸேஜ்களை தேடும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
சாட் பொக்ஸில் கலண்டர் ஐகான் இருந்தால் அதனைக் கொண்டு குறிப்பிட்ட திகதியில் அனுப்பிய மெஸேஜ்களை எடுக்க முடியும்.
iOS போன்களில் எவ்வாறு திகதி அடிப்படையில் மெஸேஜ்கள் தேடுவது.
1. அண்மைய வாட்ஸ்அப் வேர்சனை டவுன்லோட் செய்யவும் எப்பள் ஸ்டோரில் இதனை தரவிறக்க முடியும். அல்லது பழைய வேர்சனை அப்டேட் செய்யலாம்.
2. வாட்ஸ் அப்பை திறக்கவும்
3. குறிப்பிட்ட திகதியில் மெஸெஜை தேடவேண்டிய வின்டோவிற்கு செல்லவும்
4. யாருடைய மெஸெஜ் தேவையோ அவரது பெயரை தெரிவு செய்யவும்
5. சேர்ச் பட்டனை அழுத்தவும்
6. கலண்டர் ஐகோனை தெரிவு செய்யவும்
7. மாதம், வருடம் என்பனவற்றை தெரிவு செய்யவும்
8. குறித்த திகதியை தெரிவு செய்க இதன் மூலம் குறித்த திகதியில் அனுப்பிய மெஸேஜ்களை நீங்கள் பார்வையிட முடியும்.
குறிப்பிட்ட வாட்ஸ்அப் சாட்டின் போது குறித்த திகதியில் அனுப்பிய மற்றும் பெற்றுக்கொண்ட அனைத்து மெஸேஜ்களையும் நீங்கள் பார்வையிட முடியும்.
இந்த அம்சம் அனைத்து வாட்ஸ்அப் வேர்சன்களிலும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.