முகத்தில் இந்த அறிகுறி இருக்கா? கல்லீரல் பாதிப்பு உறுதி
மனித உடலில் உள்ள முக்கிய உறுப்புக்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டியது கடமையாகும். ஏனெனின் இதில் ஏதாவது பாதிப்பு ஏற்படும் பொழுது, அது உடல் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
உலகளவில் மிகவும் ஆபத்தான நோய்களில் கல்லீரல் நோயாக கொழுப்பு கல்லீரல் நோய் பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய உறுப்புக்களில் கல்லீரலும் ஒன்று. இதில் பாதிப்பு வரும் பொழுது சில அறிகுறிகள் வைத்து முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்.
கல்லீரல் பாதிப்பு மது பாவனையால் மட்டுமில்லாமல் உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய், அதிக கொழுப்பு போன்ற காரணங்களாலும் ஏற்படுகிறது.
அந்த வகையில், கொழுப்பு கல்லீரல் நோயை காட்டிக் கொடுக்கும் அறிகுறிகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.

வீக்கம்
- கல்லீரல் செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு முதலில் முகத்தில் சிறு வீக்கம் இருக்கும் கண்கள் மற்றும் கன்னங்களை பார்க்கும் பொழுது அந்த வித்தியாசம் விளங்கும். ஏனெனின் கல்லீரல் பாதிப்பு வந்த ஒருவருக்கு 4. அத்தியாவசிய புரதங்களின் உற்பத்தி குறைவாக இருக்கும், இது திரவ சமநிலை மற்றும் இரத்த ஓட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் முகம் வீக்கம் இருக்கலாம்.
கழுத்து மடிப்பில் கருப்பு புள்ளிகள்
- 'அகாந்தோசிஸ் நிக்ரிக்கன்ஸ்' என மருத்துவர்களால் அழைக்கப்படும் இந்த நிலை இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்பு கொண்டது. அதிகமான இன்சுலின் உற்பத்தில் தோலில் நிறமி மாற்றங்களைத் தூண்டி கழுத்துப்பகுதியில் கருமையை ஏற்படுத்தி விடும். இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது, உரிய மருத்துவரிடம் காட்டுவது சிறந்தது.
கண்கள் மஞ்சளாக மாறுதல்
- கல்லீரல் பாதிப்பு மோசமாக இருக்கும் ஒருவரின் கண்கள் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். ரத்த ஓட்டத்தில் பித்த உப்புகள் குவியும் காரணத்தினால் இது ஏற்பட வாய்ப்பு உள்ளது. முகத்தில் சிலருக்கு அரிப்பு போன்ற ஒவ்வாமை கூட வரலாம். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |