கல்லீரலில் கொழுப்பை கரைக்கும் ஜூஸ்- வெறும் வயிற்றில் குடிக்கலாமா?
பொதுவாக தற்போது இருக்கும் பலருக்கும் கொழுப்பு கல்லீரல் நோய் உள்ளது. இதனை “ கல்லீரல் ஸ்டீடோசிஸ்” என்றும் அழைப்பார்கள்.
இந்த பிரச்சனையின் கல்லீரல் செல்களுக்குள் அதிகப்படியான கொழுப்புக்கள் தேங்கி இருப்பதால் ஏற்படுகின்றது. அதிலும் குறிப்பாக அதிகப்படியான மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மற்றும் உடல் பருமன் அதிகரிப்பினால் அவஸ்தை அனுபவிப்பவர்கள் ஆகியோரை தாக்குகின்றது. சில சமயங்களில் மது அருந்தாதவர்களுக்கும் இந்த கொழுப்பு கல்லீரல் நோய் உருவாகக்கூடும்.
இவ்வாறு ஏற்படுவது, ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயாகும். இப்படியான சந்தர்ப்பங்களில் வரும் கல்லீரல் நோய் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளால் ஏற்படுகி்ன்றது.
கொழுப்பு கல்லீரல் நோய்க்கு முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் அது கல்லீரல் செயற்பாட்டை முழுமையாக நிறுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
கொழுப்பு கல்லீரல் பிரச்சனையுள்ளவர்கள் உரிய மருத்துவரை நாடி அதற்கான சிகிச்சை எடுத்து கொண்டு, வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டு கை வைத்தியம் முறையை முயற்சி செய்து பார்க்கலாம். இது அவர்களுக்கான நிரந்தரமான தீர்வை பெற்றுக் கொடுக்கும்.
அப்படியாயின், கொழுப்பு கல்லீரல் நோயை கட்டுபடுத்தும் பானம் எப்படி தயாரிப்பது? அதனை தினமும் குடிக்கலாமா? என்பது பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. பீட்ரூட் ஜூஸ் (Beetroot juice)
கொழுப்பு கல்லீரல் பிரச்சனையுள்ளவர்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் நிறைய பீட்ரூட் ஜீஸ் செய்து குடிக்க வேண்டும். இதிலிருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள், கல்லீரலில் உள்ள வீக்கத்தை குறைத்து அதன் செயற்பாட்டை அதிகரிக்கின்றது.
2. எலுமிச்சை மற்றும் இஞ்சி ஜூஸ்
மற்ற பானங்களை விட எலுமிச்சை, இஞ்சி கொண்டு செய்யப்படும் ஜூஸில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது கல்லீரலை சேதமடையாமல் பாதுகாத்து, அழற்சி எதிர்ப்பு பண்பால் நச்சுக்களை வெளியேற்றும்.
3. மஞ்சள் நீர்
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் குர்குமின் உள்ளது. இது கல்லீரலை சேதமடையாமல் பாதுகாத்து அதன் செயல்பாட்டை மேம்படுத்தும் வேலையை செய்கின்றது. தினமும் காலையில் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் சிறந்த பலனை எதிர்பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |