பிள்ளையின் ஆத்ம சாந்திக்காக தாய் கூறிய கடைசி வார்த்தைகள்: கதறி அழுத விஜய் ஆண்டனி
பிள்ளையின் ஆன்ம சாந்தியடைய வேண்டும் என்பதற்காக அவரின் தாய் பாத்திமா சில வார்த்தைகளை கூறியுள்ளார்.
தற்கொலை
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல வேலைகளை பார்த்து பிரபலமானவர் தான் நடிகர் விஜய் ஆண்டனி.
இவர் தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு இருக்கின்றது.
இதனை தொடர்ந்து பிச்சைகாரன் 2 படத்தில் நடிக்கும் பொழுது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு முகம் சிதைவிற்குள்ளானது.
பின்னர் மருத்துவர்கள் ஒன்றுக்கூடி விஜய் ஆண்டனிக்கு மறு வாழ்வு கொடுத்தார்கள்.
கடைசியாக அப்பாவுக்கு மகள் விட்டு சென்ற ஆதாரம்.. பார்த்ததும் மயங்கிய விழுந்த விஜய் ஆண்டனி- துயரின் உச்சம்!
மகளுக்காக சில வார்த்தைகள்
இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த 2 தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கான சரியான காரணம் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் உட்பட அனைவரும் குழப்பத்தில் இருந்து வருகின்றார்கள்.
மீராவின் உடல் இன்றைய தினம் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவரின் தாய் பாத்திமா, “உன்னை கருவில் சுமந்ததை நினைத்து பெருமை அடைகிறேன், இந்த ஜென்மத்தில் பிரிந்தாலும், அடுத்த ஜென்மத்தில் சேர்ந்து வாழ்வோம் மகளே... என்ன பிரச்சனையாக இருந்தாலும் சொல்லி இருக்கலாமே ..” என கதறி அழுதுள்ளார்.
விஜய் ஆண்டனியும் மீராவின் இறுதிச்சடங்கு முடியும் வரை அவரின் அழுகையை நிறுத்தவில்லையாம்.