வாழ்நாள் முழுவதும் பிள்ளைகளை நெஞ்சில் சுமக்கும் தந்தைகளுக்கு இதோ...
உலகத்தில் அப்பாக்கள் தினத்தில் நினைவுகூறும் தந்தையர் தினத்தினைக் குறித்து தற்போது தெரிந்து கொள்ளப் போகிறோம்.
தந்தையர் தினம்
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரது வாழ்க்கையில் பெற்றோர்கள் மிக மிக முக்கியமானவர்கள் என்பது நம் அனைவரும் அறிந்ததே. அதிலும் நமது குழந்தைகளாக இருக்கும் பருவத்தில் தாய் தந்தையரின் பங்குக்கு ஈடு இணை என்பது எதுவும் கிடையாது.
ஆம் தனது குழந்தைகளுக்கு அன்பின் அடையாளத்தினை கொடுப்பதற்கு ஒவ்வொரு தந்தையர்களும் பல வழிகளில் முயற்சித்து வருகின்றனர். பிள்ளைகளும் தங்களது நன்றியை பெற்றோருக்கு வெவ்வேறு விதத்தில் தெரிவித்து வருவதை நாம் காண்கிறோம்.
பெண் குழந்தைகளின் ஹீரோக்களாக வலம் வரும் அப்பாக்களைப் பற்றி அவ்வளவு எளிதில் நாம் கூறிவிட முடியாது. ஆண் பிள்ளைகளுக்கு கண்டிப்பான ஆசிரியராகவும், வில்லனாகவும் வலம் வரும் அப்பாக்களின் செயல் தாங்கள் ஏறும் ஏணி தான் அப்பாவின் இந்த குணம் என்று யாரும் புரிந்து கொள்வதில்லை.
உழைப்பு, சேமிப்பு, தன்னம்பிக்கையின் ஊற்று தந்தை என்றால் மிகையாகாது. அப்பா என்ற வார்த்தையில் தான் எத்தனை மந்திரங்கள். அப்பாவின் கைப்பிடித்து நடக்கும் அனுபவம் கோடி ரூபாய்க்கும் ஈடாகாது.
தன் குழந்தைகளுக்கு ஆலோசனை கூறுவதில் தொடங்கி, அனுபவ பாடங்களை போதித்து சிறந்த வழிகாட்டியாக எத்தனை பொறுப்புகள். அன்னை தன் வயிற்றில் பத்து மாதங்கள் நம்மை சுமந்தாலும், ஆயுள் வரை நெஞ்சில் சுமப்பவர் தந்தை.
முகத்தினை கோபமாகவும், எப்பொழுதும் சிரிப்பு இல்லாமல் வைத்துக்கொண்டு வெளியே சுற்றும் தந்தையர்களின் மனதில் குழந்தைகளுக்கு என்று வெளியே கூறிவிட முடியாத இடமுண்டு.
ஆரம்பத்தில் மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டது. பிந்தையது ஜூன் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு தந்தையர் தினம் 2022 ஜூன் 19 அன்று கொண்டாடப்படும். இந்த நாளில், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் தந்தையர் மீது தங்கள் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துவார்கள்.
தந்தையர் தினத்தில் உங்கள் தந்தையுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய சில அழகிய மெஸேஜ்களை இங்கு பார்க்கலாம்.
தந்தையர்களுக்கான கவிதைகள்
- சாதாரண மனிதர்களாக இருக்கும் அப்பாக்கள் அன்பால் ஹீரோக்களாக, சாகசக்கரர்களாக, கதை சொல்பவர்களாக, பாடகர்களாக பல அவதாரம் எடுக்கிறார்கள்.
- என்னை அதட்டி பேசியது அதிகம் அவர் கனவை பற்றி நினைப்பதை விட என் தேவையை நிறைவேற செய்வதே அதிகம் அவர் உடல் வலிமையை கவனித்ததை விட எனக்கு வலிமையாக என்னோடு இருந்ததே அதிகம்.
- அவர் கலங்கி நின்று நான் பார்த்தது இல்லை என் கண்கள் கலங்கும் போது அவர் வேடிக்கை பார்த்ததும் இல்லை
- அப்பா, உங்களின் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு செயலும், என் வாழ்க்கைப் பாதையின் நல் வழிகாட்டுதல்கள்
- எனது ஈடிணையில்லாத அப்பாவுக்கும் என்னுடைய சூப்பர் ஹீரோவுக்கும் என்னுடைய அன்பான அப்பாக்கள் தின வாழ்த்துக்கள்.
- இந்த உலகத்திற்கு நீங்கள் சாதாரண மனிதர் ஆனால் என்னுடைய வாழ்க்கையில் நீங்கள்தான் விடியல் என்பது எனக்குதான் தெரியும்.
- இயற்கையின் ஒரு அற்புத படைப்பு எனில் அது எனது அப்பாவின் இதயம்தான்.
- ஆணாக பிறந்த யார் வேண்டுமென்றாலும் அப்பா ஆகலாம் ஆனால் சிறந்த தந்தையாக இருக்க சிலரால் மட்டுமே முடியும்.
- தன் மானம் உள்ளவன் பிறர் கால் பிடிக்க பணிவதில்லை, தன் மகனுக்கு இழுக்கு என்றால் பிறர் கால் பிடிக்க தயங்குவதில்லை, அவர் தான் தந்தை...
- எல்லா அப்பாக்களும் ராஜாவாக இருப்பதில்லை... ஆனால் எல்லா பிள்ளைகளுமே இளவரசர்களாகவும், இளவரசிகளாகவுமே அப்பாவால் வளர்க்கப்படுகின்றார்கள்...
- தாய் என்பவள் பத்து திங்கள் வாழ்க்கையை தியாகம் செய்வாள்.. தந்தை என்பவன் வாழ்க்கையையே தன் பிள்ளைக்காக தியாகம் செய்வான்..
- பிள்ளை முகம் பார்த்தே தேவைகள் அறிவாய் உன்னால் முடியும் வரை முயன்று பார்ப்பாய். சில தடவைகள் தோற்பாய் தலையை அடமானம் வைத்துக்கூட நான் ஆசைப்பட்ட கனவுகளை முள்ளிடம் மண்டியிட்டு பூவென விழிகளில் காட்டிடுவாய்.
- இந்த உலகிற்கு நீங்கள் சாதாரண மனிதர் ஆனால் என்னுடைய வாழ்க்கையில் நீங்கள் தான் விடியல் என்பது எனக்குதான் தெரியும்.
- மகனை கஷ்டங்களே தெரியாமல் வளர்ப்பவர் நல்ல அப்பா., மகனை கஷ்டங்களை சந்திக்கவிட்டு, எதிர்கொள்ள துணைநிற்பவர் சிறந்த அப்பா....