6 வயது சிறுவனிடம் தந்தை போட்ட ஒப்பந்தம்: ஐ.நா-வே வியக்கும் கடிதத்தினை நீங்களே பாருங்க
தந்தை ஒருவர் தனது ஆறு வயது மகனுடன் ஒப்பந்தம் போட்டுள்ள நகல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இன்றும் ஒரு சிலர் தான் அன்றாடம் செய்யவேண்டிய வேலையினை அட்டவணை போட்டு எழுதி வைத்துவிட்டு செய்து வருகின்றனர்.
இதனை பெரியவர்கள் என்றால் கடைபிடித்துவிடுவார்கள். ஆனால் சிறுவர்கள் தங்களது உலகத்தில் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள்.
இவர்களுக்கு இந்த மாதிரியான அட்டவணை என்பது இல்லை என்று தான் நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியும். அவ்வாறு இல்லை என்று தந்தை ஒருவர் தனது செயலால் பதில் அளித்துள்ளார்.
இங்கு ஒரு தந்தை தன் ஆறு வயது மகனுக்குத் தினமும் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது எப்போது எழ வேண்டும் எப்போதும் தூங்கவேண்டும் என்பது வரை வேடிக்கையாக ஒரு பெரிய பட்டியலைத் தயார் செய்து கொடுத்துள்ளார்.
அபீர் என்ற ஆறு வயது சிறுவனின் தந்தை தன் மகனுக்குத் தான் ஒரு நாளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இந்த ஒப்பந்தத்தினை போட்டுள்ளார்.
இதில் சிறுவன் காலை அலாரம் வைத்து எழுவது முதல் இரவு தூங்கும் வரை எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் நாள் முழுவதும் அழாமல் கத்தாமல் மற்றும் சண்டை போடாமல் இருந்தால் நாள் ஒன்றுக்கு 10 ரூபாயும் இதை ஏழு நாள் விடாமல் தொடர்ந்தால் 100 ரூபாயும் என வேடிக்கையான ஒப்பந்தம் ஒன்றைச் செய்து அதில் கையொப்பமும் வாங்கியுள்ளார்.
குறித்த தந்தையின் ஒப்பந்தம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.
Me and my 6 year old signed and agreement today for his daily schedule and performance linked bonus ? pic.twitter.com/b4VBKTl8gh
— Batla_G (@Batla_G) February 1, 2022