மருமகளுக்காக மாமனார் செய்த செயல்! நெகிழ்ந்து போன உறவினர்கள்
இந்தியாவில் மருமகளின் உயிரை காப்பாற்ற மாமனாரே தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் ஜல்னா மாவட்டத்தை சேர்ந்தவர் பெண் ஒருவருக்கு கடந்த 6 மாதமாக சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை இருந்துள்ளது.
இதனால் உடலில் ஆங்காங்கே வீக்கம் இருந்தால், மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார், அவரை சோதித்து பார்த்ததில் சிறுநீரகம் செயலிழந்தது தெரியவந்துள்ளது.
மேலும், பெண்ணுக்கு சிறுநீர் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, பெண்ணுக்கு ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அறுவை சிகிச்சையும் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த பெண்ணின் மாமனாரே சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்தார், இதனையடுத்து கடந்த 2ம் தேதி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மருமகளின் உயிரை காப்பாற்ற மாமனாரே தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய நிகழ்வு மக்களிடையே நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.