மகனுக்காக தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்! பல லட்சம் பேரை நெகிழ வைத்த காட்சி
இரு சக்கர வாகனத்தில் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருக்கும் நபர் ஒருவர், குழந்தை விழாமல் இருக்க செய்யும் செயலை இந்த வீடியோவில் காண முடிகின்றது.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஒரு சிறுவனை பின் சீட்டில் வைத்துக்கொண்டு ஒரு நபர் ஸ்கூட்டரில் செல்வதை காண முடிகின்றது.
வீடியோவில் சிறுவன் தலை ஒரு பக்கமாக சாய்ந்து இருப்பதை பார்க்க முடிகிறது. சிறுவன் தூங்கிக்கொண்டு இருப்பதை காண முடிகின்றது.
தூக்க கலக்கத்தில் தனது மகன் கீழே விழுந்து விடாமல் இருக்க, அந்த நபர், ஒரு கையை பின்னால் நீட்டி தன் மகனை அணைத்தவாறு பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் ஸ்கூட்டர் ஓட்டுவதை வீடியோவில் காண முடிகின்றது.
இதைப் பார்க்கும் அனைவருக்கும் கண் கலங்குகிறது. அந்த தந்தையின் பாசத்தைக் கண்டு மனம் நெகிழ்கிறது.
இந்த வீடியோவை நவம்பர் 14 அன்று Abhishek Thapa என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வெளியிட்டார். "அதனால்தான் அவர் அப்பா!!” என்று வீடியோவின் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.