பெற்ற மகனைக் கொன்ற தந்தை... இதற்கு அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா?
ஜோதிடரின் பேச்சைக் கேட்டு பெற்ற மகனை தீ வைத்து கொளுத்திய சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மூடநம்பிக்கையை அதிகம் கொண்டிருக்கும் மக்கள் நாளுக்கு நாள் செய்யும் தவறுகளும் அதிகரிக்கின்றன. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள் கோவில் வீதியைச் சேந்தவர் ராம்கி.
இவரது மனைவி காய்த்ரி. இவர்களுக்கு சாய்சரன் மற்றும் சர்வேஸ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். ராம்கிக்கு ஜோதிடத்தில் ஆழ்ந்த ஈடுபாடு இருந்துள்ள நிலையில், வாழ்க்கையில் முன்னேற என்ன செய்யலாம் என ஜோதிடரை சந்தித்துக் கேட்டுள்ளார். அப்பொழுது மூத்த மகன் சாய்சரணை உடனே வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் மூத்தமகனை விடுதியில் தங்கி படிக்க வைக்க திட்டமிட்டதை மனைவி காயத்ரி எதிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டிலுள்ள மண்ணெண்ணெய் எடுத்து சாய்சரண் மீது ஊற்றி அவர் மீது தீ பற்ற வைத்துள்ளார். இதைப் பார்த்துப் பதறியடித்த காயத்ரி அவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இதில் 90% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சாய்சரன் இன்று உயிரிழந்தார்.
இதுகுறித்து பொலிஸார் விசாரணை செய்து ராம்கியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்துள்ளனர்.