விடிந்தால் திருமணம்... பிணமாக கிடந்த மகன்? தந்தையால் நடந்த கொடூரம்… என்ன நடந்தது தெரியுமா?
வாடிப்பட்டி அருகே பெற்ற மகனை கோடாரியால் வெட்டிக் தந்தை ஒருவர் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள அய்யன கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் பிரதீப் (20). பிரதீப் கூலி வேலை செய்து வந்த நிலையில் தந்தைக்கும் மகனுக்கும் அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், இரண்டாண்டுகளுக்கு முன்பு பிரதீப் தனது உறவுக்கார பெண்ணான 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இதனால் போக்சோவில் கைதாகி சிறைக்கு சென்ற பிரதீப் சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளி வந்துள்ளார்.
இதனையடுத்து, மேஜரான சிறுமிக்கும், பிரதீப்புக்கும் இரு வீட்டார் முன்னிலையில் ஞாயிற்று கிழமை திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், சனிக்கிழமை அன்று பிரதீப் குடிபோதையில் மீண்டும் தந்தை இளங்கோவனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளங்கோவன் மகனை கோடாரியால் வெட்டி கொலை செய்துவிட்டு வாடிப்பட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பிரதீப்பின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இளங்கோவனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குடும்ப சண்டை காரணமாக திருமணத்திற்கு முந்தைய நாளில் மகனை வெட்டி கொலை செய்த தந்தையின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.