மகள் கூறிய ஒற்றை வார்த்தை: கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கிய தந்தை
காதலிப்பதாக கூறிய மகளை வெட்டி கொலை செய்துவிட்டு தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் அதவத்தூர் சக்திநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த மூர்த்தி(72)யின் முதல் மனைவி பிருந்தா தேவி. இவரது மகன் அருண். முதல் மனைவி பிருந்தாதேவி காலமானதை அடுத்து இரண்டாவதாக லதா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு பின்பு பிரபாகரன் என்ற மகனும் கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் மூர்த்தியின் மனைவி லதாவும், மகன் பிரபாகரனும் விசேஷம் ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், மகள் கீர்த்தனா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போரடிக்கொண்டும், கணவர் தூக்கில் தற்கொலை செய்து சடலமாகவும் காணப்பட்டுள்ளனர்.
கீர்த்தனாவை மருத்துவமனையில் சிகிச்சையளித்து வரும் நிலையில், பொலிசாரின் விசாரணையில், கீர்த்தனா, தான் ஒருவரை காதலிப்பதாக தந்தையிடம் சொல்லியிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த தந்தை மகளை சரமாரியாக வெட்டியதுடன், அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து, மூர்த்தியும் தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.