மயக்க மருந்து கொடுத்து மாமனார் செய்த காரியம்: கதறிய இளம்பெண்
மாமனார் தனக்கு மயக்க மருந்து கொடுத்து வன்கொடுமை செய்துள்ளதாக மருமகள் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பொண்னை அடுத்த ஒட்டனேரியைச் சேர்ந்தவர் 18 வயது இளம்பெண் ஒருவர், தனது குழந்தையுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
குறித்த புகாரில் கடந்த 2018ம் ஆண்டு தனக்கு 16 வயதாக இருந்த பொழுது எனக்கும், ஸ்ரீராமுலு என்பவரின் மகன் சதீஷ்குமாருக்கும் கட்டாய திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு முன்பு தனது வீட்டிற்கு வந்த எனது மாமனார் தனது தாயிடம், சொத்து குறித்தும், தனது மகன் மட்டும் ஒரே வாரிசு என்று ஆசை வார்த்தை கூறியதால் தாய் தன்னை திருமணம் செய்து வைப்பதற்கு சம்மதித்தார்.
திருமணத்திற்கு முன்பு வரை எனது கணவர் சதிஷ்குமாரை நாங்கள் யாரும் பார்க்கவில்லை. திருமணத்திற்கு பின்னர்தான், என் கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
இந்நிலையில் ஒரு நாள் எனது மாமனார் எனக்கு தெரியாமல் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னை வன்கொடுமை செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த நான், அவரிடம் கேட்டபோது, இதை வெளியே சென்னால் என்னையும் என் தங்கை, தாயையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதோடு, தொடர்ந்து பல நாட்கள் மிரட்டி தன்னை வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் நான் கர்ப்பமானேன். எனக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்துத, என்னை அடித்து கொடுமைப்படுத்திவந்ததாகவும் குறித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
பொலிசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
