நாளுக்கு நாள் புழுவாய் துடிதுடித்த பெண்: மாமனாரை சோற்றில் விஷம் வைத்து கொன்ற மருமகள்
மருமகளுக்கு நாளுக்கு நாள் வன்கொடுமை தொல்லை கொடுத்த மாமனாரை சோற்றில் விஷம் வைத்து மருமகள் ஒருவர் கொலை செய்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கேளல் கிராமத்தைச் சேர்ந்த வினோபாராஜனுக்கும், கனிமொழிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
ஆனால், இந்த தம்பதி குழந்தை இல்லாததால் விரக்தியில் இருந்துள்ள நிலையில், மகன் இல்லாத தருணத்தில் மருமகளுக்கு மாமனார் முருகேசன் வன்கொடுமை தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கணவரிடம் மனைவி பலமுறை முறையிட்டும், தனது தந்தை அவ்வாறு செய்யமாட்டார் என்று கூறியுள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நாளுக்கு நாள் எல்லை மீறி நடந்துள்ளார்.
இந்நிலையில், ஜூலை 31-ம் தேதி இரவு மாமனாருக்கு உணவு கொடுக்கும்போது குழம்பில் எலிபேஸ்ட் கலந்து கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட முருகேசன் வயிற்றுவலி மற்றும் வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
யாருக்கும் எதுவும் சந்தேகம் வராததால் முருகேசனுக்கு இறுதிச்சடங்குகள் நடந்து முடிந்தது. உணவில் விஷம் வைத்து கொலை செய்த மருமகள் அதனை யாரிடமும் தெரிவிக்காமல் தொடர்ந்தும் மறைத்து வந்துள்ளார்.
மாமனாரை கொலை செய்ததால் மருமகள் கனிமொழி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், மாமனாரை கொலை செய்ததாக கீழத்தூவல் காவல்நிலையத்தில் மருமகன் சரணடைந்தார். இது தொடர்பாக அவரிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.