மாமனாரின் பிறந்தநாளுக்கு சமந்தா கூறிய வாழ்த்து: பதில் அளிக்காத நாகர்ஜுனா! சூடுபிடிக்கும் விவாகரத்து சர்ச்சை
நடிகை சமந்தா விவாகரத்து சர்ச்சை சென்று கொண்டிருக்கும் நிலையில், அவரது மாமனார் நாகர்ஜுனாவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளாமல் இருந்தது பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகை சமந்தா சமீபத்தில் டுவிட்டரில் தனது கணவர் குடும்பத்தின் பெயரை நீக்கியதிலிருந்து ரசிகர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் மாமனார் நாகர்ஜுனாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்தார். தன்னை வாழ்த்தி ட்வீட் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பதில் அளித்த நாகர்ஜுனா சமந்தாவிற்கு மட்டும் பதில் அளிக்கவில்லை.
காரணம் சமந்தா நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் நாகர்ஜுனாவின் பிறந்தநாளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட விழாவிற்கும் அவர் வருகை தரவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியே பரவிய நிலையில், சமந்தாவிடம் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். வேலையில் பிசியாக இருந்ததால் பார்ட்டிக்கு வரவில்லை என்று சமந்தாவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தினால் சமந்தாவின் விவாகரத்து சர்ச்சை இன்னும் அதிகமாகியே உள்ளது.