இறந்து போன கணவர்: 4 குழந்தைகளுடன் வசித்து வந்த பெண! மாமனார் செய்த கேடுகெட்ட செயல்
கணவரை இழந்த பெண் ஒருவர் தனது 4 குழந்தைகளுடன் மாமனார் வீட்டில் இருந்த நிலையில், மாமனார் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், கீழக் கடையம் குமரேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ஸ்ரீஜா.
இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில் 9 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்ததால் மாமனார் சுப்பிரமணியன் வீட்டில் ஸ்ரீஜா வசித்து வந்துள்ளார்.
கடந்த வாரம் தாய் வீட்டிற்கு சென்று திரும்பிய ஸ்ரீஜா வீட்டில் இருந்த பொருட்கள் காணாமல் போயுள்ளதால், தனது மாமனாரிடம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மாமனார் ஸ்ரீஜாவை அவதூறாக பேசியதுடன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்து பகுதியில் ஸ்ரீஜாவை குத்தியுள்ளார்.
அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஸ்ரீஜாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேல் சிகிக்சைக்காக திருநெல்வேலி மருத்துவமனையில் மாற்றப்பட்ட ஸ்ரீஜா அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது குறித்து வழக்கும் பதிவு செய்த பொலிசார் சுப்பிரமணியனைக் கைது செய்துள்ளனர்.