கொட்டும் மழையில் மகளுக்காக தந்தை செய்த காரியம்... தந்தையர் தினத்தில் வைரலாகும் புகைப்படம்
தந்தையர் தினமான இன்று இணையத்தில் தந்தை மகள் புகைப்படம் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.
உலக தந்தையர் தினமான இன்று தங்களின் தந்தைகளின் தியாகங்களையும் அன்பையும் கூறி இணையத்தில் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆன்லைன் மூலம் படிக்கும் தனது மகள் நனையாமல் இருக்க அவரது தந்தை குடைப்பிடித்தபடி நிற்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, தனது வீட்டில் ஆன்லைன் வகுப்பை கவனிக்க நெட் சிக்னல் கிடைக்காததால், சாலையோரம் அமர்ந்து பாடம் கவனிப்பது வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், அப்பகுதியில் திடீரென மழை கொட்டியதால். தனது மகள் மழையில் நனையாத வகையிலும் வகுப்பு பாதிக்காத வகையிலும் அவரது தந்தை குடை பிடித்து நின்றுள்ளார். அப்போது அவரது அருகில் அவரது இன்னொரு மகளும் நிற்கின்றார். இப்புகைப்படம் இன்று தந்தையர் தினத்தன்று தீயாய் பரவி வருகின்றது.
