பெற்ற மகளை புழுவாய் துடிக்க வைத்த தந்தை... நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டனை
மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து புதுக்கோட்டையில் உள்ள மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய விவசாயி ஒருவர் தனது 17 வயது மகளுக்கு வன்கொடுமை தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் தாய் கடந்த வருடம் ஜுலை மாதம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து, இரண்டு பிரிவுகளில் போக்சோ சட்டத்தில் விவசாயி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்திற்கு வந்ததையடுத்து, வழக்கினை விசாரித்த நீதிபதி டாக்டர் சத்யா அதிரடியாக தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
குறித்த தீர்ப்பில் பெற்ற மகளுக்கே இவ்வாறு தொந்தரவு கொடுத்துள்ளதால், தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவரை திருச்சி மத்திய சிறைக்கு குறித்த சிறுமியின் தந்தையை பொலிசார் அழைத்துச்சென்றுள்ளனர்.