உடலில் உள்ள கொழுப்பை எரித்து, உடல் எடையை குறைக்கும் ஸ்பெஷல் வெஜிடபிள் சூப்!
உடல் எடையைக் குறைப்பதற்கு எவ்வித உடற்பயிற்சியும் இன்றி ஒரு கப் வெஜிடபள் சூப் மூலம் குறைத்துக்கொள்ளலாம்.
அந்தவகையில் வெஜிடபள் சூப் எவ்வாறு செய்வதென்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் தாள் - 3
கேரட்- 2
கோவா - 1
போஞ்சி - 10
வெங்காயம் - 1
பூடு - 3
இஞ்சி - தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் - தேவையான அளவு
மிளகு - 1/2 தேக்கரண்டி
கெப்சிகம் (குடை மிளகாய்) - 1
செய்முறை
முதலில் வெங்காயத்தாளின் பாதித்துண்டு, கேரட்டின் மேல் உள்ள தோல் பகுதி, கெப்சிகனின் மேல் பகுதி, கோவாவின் மேல் பகுதி, அரை வெங்காயம், 3 பூடுகள், சிறிய இஞ்சி, மிளகு போன்றவற்றுடன் தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை குக்கரில் வேக விடவும்.
குக்கரில் வேக வைத்த மரக்கறிகளை தண்ணீர் மட்டும் வடிக்கட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும்.
பிறகு, சூப் செய்ய தேவையான அளவிற்கு மரக்கறிகளை சிறிறு சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் ஒலிவ் எண்ணெய் சேர்த்து அதனுடன் வெங்காயம், இஞ்சி, பூடு சேர்த்து கிளறிகொள்ளவும். பிறகு அதனுடன் பொடி பொடியாக நறுக்கி வைத்த கேரட், போஞ்சி, கோவா என்பவற்றை சேர்த்து மெதுவாக வதக்கிக் கொள்ளவும்.
லேசாக வதங்கியவுடன் அதனில் தேவையான அளவு நீர் சேர்த்துக்கொள்ளவும். அதனில் முன்னதாக எடுத்து வைத்த மரக்கறி அவித்த தண்ணீரை அதனில் சேர்த்து 2 நிமிடம் வேக வைக்கவும்.
2 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு உப்பு, சோயா சோஸ் மற்றும் சிலி சோஸ் என்பவற்றை தலா 1 தேக்கரண்டி சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
5 நிமிடம் வேக வைத்தப்பிறகு 2 கரண்டி சோள மாவை நீருடன் கலந்து சூப்பில் சேர்த்துக் கொள்ளவும். இறுதியில் 1/2 கப் வெங்காயத்தாளை சேர்த்துக் கிளறி இறக்கிக்கொள்ளவும்.