உடலில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இந்த கீரையை மட்டும் சாப்பிடுங்க!
உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதே இன்று பலருக்கும் பகுதிநேர வேலையாகிவிட்டது. இனி அதை நினைத்து கவலைக் கொள்ள வேண்டாம்.
உடலில் உள்ள அதிகமான கொழும்பை குறைக்க தண்டு கீரை மிளகு கசாயம் இலகுவான மருந்தாக உள்ளது.
செய்முறை
நன்றாக சுத்தப்படுத்திய தண்டுக்கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் 10 மிளகை எடுத்து நன்றாக தட்டிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 5 டம்பளர் தண்ணீர் சேர்த்து தண்டுக்கீரை, மிளகு கொஞ்சமாக மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
கீரையுடன் நன்கு கொதிக்க வைத்து நீரை பாதியாக சுண்டவைத்து இறக்கி வடிகட்டி குடிக்கலாம். இவ்வாறு குடிப்பதனால் உடலில் உள்ள அதிகமான கொழுப்பை குறைத்துக் கொள்ளலாம்.
தினமும் காலை மாலை என இருவேளையும் வெறும் வயிற்றில் குடித்தால் உங்கள் உடலின் மாற்றத்தைப் பார்க்கலாம். மேலும், இரவு உறங்குவதற்கு முன் இரண்டு வெற்றிலை, இரண்டு மிளகு, ஐந்து உலர் திராட்சை ஆகியவற்றை மென்று விழுங்கவும்.
கொழுப்பு குறைய
இயற்கையாகவே கொழுப்புச்சத்து மிகுந்த பால், முட்டை மற்றும் இறைச்சி போன்றவற்றை உண்பது குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் அவற்றை எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பதிலும் கவனம் இருப்பது அவசியமாம்.
மேலும் நிலக்கடலை, முந்திரி மற்றும் தேங்காய் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதில் பிரச்சினையில்லை. ஆனால் அவற்றை மதுவுடன் எடுத்துக்கொள்ளக்கூடாது. குறிப்பாக வறுத்து உண்பது கூடாது. மேலும் எந்த அளவு எடுத்துக்கொள்கிறோம் என்பதும் கட்டாயம் கருத்தில் கொள்ளவேண்டியதொன்றாகும்.
எல்லாக் காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு பதிலாக இஞ்சியையும், வர மிளகாய்க்கு பதிலாக மிளகையும் பயன்படுத்தினால் உடல் கொழுப்பைக் குறைக்கலாம்.