இந்தியாவில் அமுலுக்கு வந்த FastTag: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
இந்தியாவில் நாடெங்கும் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்க சாவடிகளில் FastTag ஸ்டிக்கர் கட்டாயம் என்ற நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது. எதற்காக FastTag? செயல்படும் விதம் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கொண்டு வரப்பட்டதே ஃபாஸ்டேக் நடைமுறை.
FastTag என்பது Radio Frequency Identification தொழில்நுட்பத்தில் இயக்கக்கூடிய ஸ்டிக்கர். அந்த ஸ்டிக்கர் இணையதள வாலெட் ஒன்றோடு இணைக்கப்பட்டிருக்கும். மொபைலில் ப்ரீபெய்டு ரீசார்ஜ் செய்வது போல் FastTag கணக்கில் ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த ஸ்டிக்கரை வாகனத்தின் முன் கண்ணாடியில் உட்புறமாக ஒட்ட வேண்டும்.
நீங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் போது அங்கிருக்கும் சென்சார், ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து சுங்கக்கட்டணத்தை உங்கள் கணக்கில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளும்.
FastTag ஸ்டிக்கரை பேடிஎம், வங்கிகள் மற்றும் மத்திய அரசின் NHAI இணையதளம் மூலம் பெறலாம். அதே போல் சுங்கச்சாவடி பகுதிகளில் FastTag ஸ்டிக்கர் வழங்க ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு FastTag ஸ்டிக்கரை 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.