நீளமான அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? விளக்கெண்ணையுடன் இதை கலந்தால் போதும்
தலைமுடி உதிர்வு ஒரு பக்கம் இருக்க சிலருக்கு முடி வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கும். அதாவது வேகம் குறைவாக இருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கும் எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.
ஆனால் இதற்கான சில வழிகள் உள்ளன. அதிலும் நாம் தேங்காய் எண்ணெய் தான் தலைமுடிக்கு அதிகம் பயன்படுத்துவோம். ஆனால் விளக்கெண்ணை நம் தலைமுடி வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும்.
இந்த விளக்கெண்ணையை சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தினால் நம் தலைமுடி வளர்ச்சியை வேகமாக அதிகரிக்கலாம். இதனால் நீளமாகவும் அடர்த்தியான கூந்தலை எம்மால் பெற முடியும். இதை பற்றி இங்கு பார்க்கலாம்.
விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய், டீ-ட்ரீ ஆயில் மற்றும் கற்றாழை ஹேர் மாஸ்க்: இந்த ஹேர் மாஸ்க் தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அளித்து, முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
இதற்கு முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் விளக்கெண்ணெயுடன் கற்றாழை ஜெல்லை எடுத்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் சில துளிகள் டீ-ட்ரீ ஆயிலை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை தலையின் வேர்க்கால்களில் படும் படி தடவி 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின்னர் இதை வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவ வேண்டும். இந்த ஹேர் மாஸ்க்கை வாரம் 2 முறை பயன்படுத்தினால் முடி வளர்ச்சி விரைவாக இருக்கும்.
விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் வெந்தய ஹேர் மாஸ்க்: முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் வெந்தய பவுடரை எடுத்து அதனுடன் விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதை தலைமுடியின் வேர் முதல் நுனிப்பகுதி வரை தடவ வேண்டும். அதன் பின் ஒரு டவலை எடுத்து வெதுவெதுப்பான நீரில் நனைத்து பிழிந்து, அதை அப்படியே தலையில் சுற்றி, 10-15 நிமிடம் கட்ட வேண்டும்.
இப்படியே ஊறவைத்து 30 நிமிடங்களுக்கு பின் தலைமுடியை நல்ல ஷாம்பூ கொண்டு கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 2 முறை போட்டால் சிறந்த பலன் கிடைக்கும். இந்த ஹேர் மாஸ்க் தலை முடியை மென்மையாக வைத்துக் கொள்வதோடு, முடி உடைவதைத் தடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |