ஒரே நாளில் ரூ.4 லட்சம் சம்பாதித்த தக்காளி விவசாயி
ஒரே நாளில் தக்காளி விற்று ரூ.4 லட்சத்தை வருமானமாக ஈட்டியுள்ளார் விவசாயி ஒருவர்.
கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் தக்காளி விலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
சில நாட்களிலேயே லட்சாதிபதியான விவசாயிகள் குறித்த செய்தியை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் ஒரேநாளில் ரூ.4 லட்சத்தை சம்பாதித்துள்ளார் விவசாயி ஒருவர்.
தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த விவசாயியான வெங்கடேஷ்(வயது 27) என்பவரே இவ்வாறு வருவாய் ஈட்டியுள்ளார்.
3900 கிலோ தக்காளிகளை சுமார் 260 பெட்டிகளில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார்.
ஒரு பெட்டிக்கான விலை 1550 முதல் விற்பனையானது, கொண்டு வந்த நேரத்திலேயே மளமளவென விற்று தீர ஒரே நாளில் 4 லட்சத்தை வருமானமாக ஈட்டினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளாக தக்காளி விவசாயம் செய்து வருகிறேன், 9 ஏக்கர் அளவுக்கு தக்காளி பயிரிட்டுள்ளேன்.
தக்காளியின் விலை அதிகரிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன், இன்னமும் தக்காளி பறிக்க வேண்டியுள்ளது, விவசாயம் எப்போதும் விவசாயிகளை கைவிடாது.
இதுபோன்ற நம்பிக்கை இருந்தாலும் பலரும் தைரியமாக விவசாயத்தில் இறங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |