ஏதோ இந்த உலகத்திலயே நீதான் pregnancy மாதிரி எத்தன போட்டோ சூட்! திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த வில்லி வெண்பா
பாரதி கண்ணம்மாவில் வில்லத்தனங்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் வில்லி வெண்பாவாக நடித்துக் கொண்டிருப்பவர் ஃபரீனா ஆசாத். இவர் சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார்.
சீரியல் உச்சக்கட்ட பரபரப்பில் செல்லும்போது சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஏதேனும் ஒரு புகைப்படத்தை போட்டு, மேலும் ஒரு டிவிஸ்டை கொடுத்துவிடுவார்.
இதனால், ஃபரீனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 935k ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.
ரசிகர் கூட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் இவரை திட்டித் தீர்ப்பதற்கு என்றும் ஒரு கூட்டம் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தான் 7 மாத கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து ஃபரீனா, தினமும் பெரிய வயிறு தெரியும் படி விதவிதமாக போட்டோஷூட் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஃபரீனா இப்படி பண்றீங்க நீங்க மட்டும் தான் இந்த உலகத்தில் கர்ப்பமாக இருக்கின்றீர்களா என்று கண்ட மேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் சற்றும் தயக்கம் இன்றி ஃபரீனா அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றார்.
