சேலையில் ஆளை மயக்கும் வில்லி வெண்பா!
தொகுப்பாளராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கி இன்று வெற்றிகரமான சின்னத்திரை நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார் பரீனா ஆசாத்.
அஞ்சரை பெட்டி, கிச்சன் கலாட்டா என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருந்த பரீனா, அழகு சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார்.
ஆனால் இவருக்கு பெயரை பெற்றுக் கொடுத்தது என்னவோ பாரதி கண்ணம்மா சீரியல் தான்.
இதில் கதாநாயகன் பாரதியை ஒருதலையாக காதலிக்கும் பெண்ணாக இவர் செய்யும் வில்லத்தனம் மக்களிடம் வரவேற்பை பெற்றது.
கடந்த 2017ம் ஆண்டு தன்னுடைய காதலரான ரஹ்மான் உபைத்தை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களில் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்தாலும், ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஆண் குழந்தையும் இருக்கிறது, நிறைமாத கர்ப்பிணியாக சீரியலில் பரீனா நடித்து அனைவரின் மனதையும் வென்று விட்டார் என்றே கூறலாம்.
கர்ப்ப காலத்திலும் கூட வேலை, ஃபோட்டோஷூட்கள் என தன்னைத்தானே பிஸியாக வைத்துக் கொண்டார் பரீனா.
இதுவே பல பெண்களுக்கு உந்துதலாக இருந்தது என்றும் கூறலாம், பல இன்னல்களை கடந்து சிங்கப்பெண்ணாக ஜொலித்துக் கொண்டிருக்கும் பரீனாவுக்கு ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்றால் அது மிகையல்ல!!!