என் குழந்தைய கூட திட்டுனாங்க! கண்கலங்கிய வில்லி வெண்பா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
பாரதியை திருமணம் செய்து கொள்வதற்காக வெண்பா போடும் சதித்திட்டங்களே கதையின் மையக்கரு.
இதை முறியடித்து பாரதியும், கண்ணம்மாவும் எப்போது ஒன்று சேரப்போகிறார்களோ என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கொடூர வில்லி வெண்பா
இந்த தொடரில் வில்லி வெண்பா கதாபாத்திரத்தில் அசத்தி வருகிறார் பரீனா ஆசாத்.
நிறை மாத கர்ப்பணியாக இருந்தபோது கூட சீரியலில் நடித்து அசத்தினார் பரீனா, இதுமட்டுமா பலவித்தியாசமான போட்டோஷீட்களும் நடத்தினார்.
இன்ஸ்டாவில் இந்த புகைப்படங்களை பகிர பலராலும், ”நீங்கள் அனைவருக்கும் முன்மாதிரி” என்றெல்லாம் புகழ்ந்தனர்.
அதேசமயம் பலரும் கடுமையாக விமர்சித்தும் இருந்தனர்.
குழந்தையை திட்டுனாங்க- கலங்கிய பரீனா
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பரீனா பேசுகையில், நெகடிவ் ரோல் செய்வதால், நிறைய நெகடிவ் கருத்துக்களும் என்னை நோக்கி வந்துள்ளது.
ஆனால், அதை எல்லாம் தாண்டி, நான் கர்ப்பிணியாக இருந்த போது, நடித்துக் கொண்டிருந்த சமயத்தில், என்னுடன் சேர்த்து எனது குழந்தையையும் திட்டினார்கள் என உருக்கத்துடன் பேசியுள்ளார்.
பிக்பாஸ் வனிதா மதம் மாறியது ஏன் தெரியுமா?
