கேவத்தில் தல ரசிகர்கள்! பால் பாக்கெட்டில் அடி வாங்கிய வலிமை தயாரிப்பாளர்
வலிமை படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரிலீசாகி உள்ளது.
வலிமை படத்தை பார்க்க அதிகாலையிலேயே அஜித் ரசிகர்கள் திரையரங்குகள் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இன்று காலை 4 மணிக்கு வலிமை படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.
#BoneyKapoor was very upset with #AjithKumar fans act.
— Nathan Drake (@SnickersFreak7) February 24, 2022
Fans were started hitting him and his car with looted milk and curd packets after #ValimaiFDFS for producing this disaster movie #Valimai#ValimaiReview #ValimaiDisaster pic.twitter.com/tUJDmvIG0K
வலிமை படத்தின் முதல் காட்சியை ரசிகர்களோடு பார்க்க வலிமை படக்குழுவினரும் வந்துள்ளனர். சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் தயாரிப்பாளர் போனி கபூர், நடிகை ஹூமா குரேஷி, வில்லன் நடிகர் கார்த்திகேயா ஆகியோர் ரசிகர்களோடு காலை 4 மணிக்கே திரையரங்குக்கு வந்து படத்தை பார்த்தனர்.
போனிகபூர் காரில் வந்தபோது தியேட்டர் முன் குவிந்திருந்த அஜித் ரசிகர்கள், அவரது கார் மீது பால் பாக்கெட் மற்றும் தயிர் பாக்கெட்டை எரித்துள்ளனர்.
இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். உண்மையில் ரசிகர்கள் அன்பில் செய்ததை நெட்டிசன்கள் ஆத்திரத்தில் என மாற்றி விட்டனர். இது தான் உண்மையில் நடந்தது.

இதேவேளை, கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்த வனிதாவின் தம்பி அருண் விஜய், தற்போது அவரது ரசிகனாக வந்து வலிமை படத்தின் முதல் காட்சியை பார்த்துள்ளார்.
அவர் திரையரங்கில் ரசிகர்களோடு அமர்ந்து வலிமை படத்தை பார்த்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
