ஒரு பக்கம் சரிந்த விஜயகாந்தின் தலை! கேப்டனுக்கா இந்த வேதனைக்குரிய நிலை...கதற வைத்த அதிர்ச்சி வீடியோ
நடிகர் விஜயகாந்தின் பரிதாபநிலையை சுதந்திர தினத்தில் நேரில் கண்ட ரசிகர்கள் கதறி அழுது வருகின்றனர்.
நாடு முழுதும் இன்று 75-வது ஆண்டு சுதந்திர தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுதல், புராதன சின்னங்களில் தேசியக் கொடியை ஒளிர விடுதல் போன்றவைகள் கடைபிடிக்கப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றி தங்கள் தேசப்பற்றை காண்பித்து இருந்தனர்.
#vijayakanth@iVijayakant #PremalathaVijayakanth
— Mayur GY 🎞✂( Film Maker & Editor ) தளபதி (@DirectorMayurGY) August 15, 2022
75th Independence day pic.twitter.com/tQWwM71KY2
கையசைத்த கேப்டன்
அந்த வகையில் நடிகர் விஜயகாந்த் அலுவகத்தின் முன்பும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது. விஜயகாந்த் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து தேசிய கொடியை ஏற்றி தன் கட்சி தொண்டர்களுக்கு கையசைத்திருந்தார்.
தேசிய கொடியை ஏற்றும் போது அவரின் மனைவி ஒரு கையில் கேப்டனின் முகத்தை சரியாதவாறு பிடித்தார். கேப்டனுக்கு இப்படி ஒரு நிலையா என்று அவரை பார்த்து தொண்டர்கள் பலரும் கதறி அழுதிருக்கிறார்கள்.
விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தொண்டர்கள் வேதனைப்பட்டு அழும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சோசியல் கேப்டன் என்ற அந்தஸ்துடன் ஒரு காலத்தில் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த்.
தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் இவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தார்.
அவரை இப்படி ஒரு நிலையில் பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.