பிக் பாஸ் வி.ஜே பார்வதிக்கு ரசிகர்கள் கொடுத்த பரிசு - அவ இனி திருந்த மாட்டா
பிக் பாஸ் வீட்டில் இருந்து பார்வதி மற்றும் கம்ருதின் ரெட் கார்ட் வாங்கி வெளியேறினார்கள். இப்படி இருக்கையில் தற்போது பார்வதிக்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் பரிசு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
விஜே பார்வதி
பாரு, கம்மு ரெட் கார்ட் கொடுத்து விஜய் சேதுபதி மூலம் வெளியில் அனுப்பப்பட்டனர்.
இவர்கள் இருவரும் பிக் பாஸ் 9 வீட்டில் கடைசி வரை இருப்பார்கள் என்று நம்பப்பட்ட நிலையில் வி.ஜே. பார்வதி சாண்ட்ரா விஷயத்தில் நடந்து கொண்டதை கண்டித்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் இரண்டு ரெட் கார்டுகளை காண்பித்து பார்வதி மற்றும் கம்ருதீன் மற்றும் பார்வதியை வெளியேற்றியது அனைத்து மொழி பிக் பாஸ் பார்வையாளர்களையும் கவர்ந்தது.
விஜய் சேதுபதிக்கு பாராட்டும் கிடைத்தது. ஆனால் பார்வதி என்ன தான் மக்களால் வெறுக்கபட்டாலும் அவர் வெறுயேறும் வரையில் மக்களின் வாங்கு மட்டும் குறையவில்லை.
வாக்கு பட்டியலில் அவர் முதல் 3 இடத்திலேயே இருந்தார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து இரண்டு வாரங்கள் முடிந்த நிரலயில் இதில் டைடில் வின்னராக பார்வதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ரசிகர்கள் பரிசு
பார்வதி ரசிகர்களை சந்நிக்க சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இணைந்து, பார்வதிக்கு டைட்டில் வின்னர் என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள் சிலரோ, பார்வதி ஜென்மத்திற்கும் திருந்த மாட்டாங்க போல, பிக்பாஸ் டைட்டில் ஏற்கனவே திவ்யாவுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது.

அப்படி இருக்கையில், இந்த விளம்பரம் தேவையா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் சிலரோ, இந்த நிகழ்ச்சியில் மொத்தமாகவே 34 பேர் தான் கலந்து கொண்டனர்.
அதில் ரசிகர்கள் என்று பார்த்தால் வெறும் 12 பேர் தான். மீதி எல்லாம் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |