சரிகமப மேடையில் கீர்த்தி சுரேஷிடம் காதலை வெளிப்படுத்திய போட்டியாளர் ! பொறாமையில் ரசிகர்கள்
சரிகமப நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சி தான் சரிகமப. அதன் சீசன் 4 தற்போது இடம்பெற்று வருகின்றது.
சரிகமப
ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்சியை அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகின்றார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் ஸ்ரீ பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
23 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் தங்களின் திறமைகளை அதிரடியாக வெளிப்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில் ரிகமப நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த நடிகை கீர்த்தி சுரேஷிடம் ஒரு போட்டியாளர் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |