பும்ராவுடன் நடந்துபோன தோனிக்கு திடீரென பெண் ரசிகை வச்ச வேண்டுகோள்... புன்னகையுடன் சென்த தல! வைரல் வீடியோ
தல தோனியின் ரசிகர் ஒருவர் குறும்பு தனமாக வைத்த கோரிக்கை தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்திய வீரர்கள் துபாய் மைதானத்தில் பயிற்சியை முடித்துவிட்டு அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது பெண் ரசிகை ஒருவர் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலை பார்த்து, ‘ப்ளீஸ் ராகுல், இன்றைக்கு மட்டும் நன்றாக விளையாடாதீர்கள்’ என குறும்பாக கூறியுள்ளார்.
அப்போது ராகுலுக்கு பின்னால் தோனியும், பும்ராவும் நடந்து வந்துகொண்டு இருந்தனர்.
Pakistan fans doing friendly banters with @MSDhoni and Rahul ?❤pic.twitter.com/6XWUnYn717
— Dhoni Army TN™ (@DhoniArmyTN) October 23, 2021
உடனே, ‘மஹி இந்த போட்டி மட்டும் வேண்டாம், அடுத்த போட்டியை பார்த்துக் கொள்ளுங்கள்’ என அந்த பெண் ரசிகை கூறினார்.
ஆனால் தோனி ஏதும் கூறாமல் சிரித்துக்கொண்டே சென்றார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.