மைதானத்திற்குள் ஓடிப்போய் ரசிகர் செய்த தரமான சம்பவம்! ஹீரோவான் ரோஹித் ஷர்மா... வைரல் வீடியோ
இந்தியாவில் கிரிக்கட்டுக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது பலரும் அறிந்த விடயம் தான்.
அதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு தான் இந்த வீடியோ.
நியூசிலாந்து-இந்தியா டி-20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கிரிக்கெட் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் ரோஹித் ஷர்மாவின் காலில் விழுந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
And a fan stormed into the field!!! The fellow sitting beside me, “ab maar khaaye chahe jo ho uska Sapna poora ho gaya! Ab yeh Ranchi mein Hatia mein Jharkhand mein poore India mein famous ho gaya!!” #IndiaVsNewZealand #INDVsNZT20 #fans #CricketTwitter pic.twitter.com/6NsIQDY0fO
— Sunchika Pandey/संचिका पाण्डेय (@PoliceWaliPblic) November 19, 2021
தங்களுக்கு பிடித்தமான கிரிக்கெட் வீரரை தொட்டு விட வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும்.
அப்படி ஒரு சம்பவம் தான் நேற்றைய தொடரில் நடைபெற்றுள்ளது. போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் கிரிக்கெட் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் திடீரென்று மைதானத்திற்குள் நுழைந்து ரோஹித் இருந்த இடத்திற்கு ஓடி சென்றுள்ளார்.
ரோஹித் அருகே சென்ற அந்த ரசிகர் அவருடைய காலில் விழுந்து வணங்கினார். உடனே ரோஹித் அவரை எழுப்பியுள்ளார். இந்த தரமான சம்பவம் குறித்தான வீடியோ சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.