யாராவது சுஜாதாவுக்கு உதவுங்கள்! - பாடகி சுஜாதாவின் பிரச்சனைக்கு ரைஹானா இரங்கல்
தென்னிந்திய பாடகி சுஜாதா கடந்த ஐந்து வருடங்களாக சினிமாவில் பாடுவதை உடல்நல பிரச்சனை காரணமாக நிறுத்தி உள்ளார்.

பாடகி சுஜாதா
தென்னிந்திய பாடகி சுஜாதா கடந்த ஐந்து வருடமாக சினிமாவில் பாடுவதை நிறுத்தி உள்ளார். இவர் தானாக இந்த முடிவெடுக்கவில்லை. இவருடைய உடல் நல பிரச்சனை காரணமாக தான் இப்படி ஆகி உள்ளது.
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், எம்.எம்.கீரவாணி, எஸ்.ஏ.ராஜ்குமார், மணி ஷர்மா போன்ற இசையமைப்பாளர்களின் சுமார் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடகி சுஜாதா பாடி உள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட, மராத்தி, உள்ளிட்ட பல மொழிகளில் இவர் பாடி உள்ளார். மிக முக்கியமான பின்னணி பாடகர்களில் சுஜாதாவும் ஒருவர்.
இவர் ‘காதல் ஓவியம்’ பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக் மத்தியில் அறிமுகமானார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இன்னும் இருக்கின்றனர்.
இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விருது பெற்றார். அப்போது இவர் பேசிய விடயம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

“கடந்த 5 ஆண்டுகளாக நான் எந்த மேடையிலும் பாடவில்லை. அதற்கு காரணம், எனக்கு தொண்டையில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அதனால், என்னால் முன்பை போல் பாட முடியவில்லை” என்றார்.
இந்த நிலையில் சுஜாதாவின் இந்த நிலைக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ரைஹானா இரங்கல் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரஹ்மானின் சகோதரி ரைஹானா
ரஹ்மானின் சகோதரி ரைஹானா பேசிய வீடியோவில் "எனது தாய் இப்போது இருந்திருந்தால் சுஜாதாவுக்காக பிரார்த்தனை செய்திருப்பார். அவருக்கு சுஜாதா மீது அவ்வளவு பாசம்.
இந்த வீடியோவை பார்க்கும் மருத்துவர்கள் யாராவது சுஜாதாவுக்கு உதவுங்கள். அவருக்கு தொண்டையில் சில பிரச்சினைகள் இருக்கிறது. அவரின் குரல் மீண்டும் கேட்க வேண்டும்.
அவரின் பாடல்களை நாம் மீண்டும் கேட்க வேண்டும்" என்று கூறி உள்ளார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |