பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு... காரணம் என்ன?
பிரபல இந்தி மற்றும் மராத்தி மொழி சீரியல்களில் நடித்த பிரபல நடிகை ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குங்கும் பாக்யா தொடர்
நடிகை சஞ்சிதா உகாலே(22) பிரபல இந்தி சீரியலான குங்கும் பாக்யா தொடரில் நடித்து பிரபலமானார் தனது இயல்பான நடிப்பினால் திரையில் குறுகிய காலத்தில் அதிகப்படியான ரசிகர் பட்டாளத்தினை வைத்திருந்தார்.
சீரியல் மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஞாயிற்றுகிழமை மாலை மும்பையில் உள்ள வீட்டில் தனியாக இருந்த நிலையில், 7 மணியளவில் மின்விசிறியின் மூலமாக உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
குறித்த நடிகையை தொடர்பு கொள்ள முடியாததால் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் சந்தேகமடைந்து போலிசாருக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு போலிசார் வந்துள்ளனர்.
உடனே உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சந்தேகம் அளிக்கும் வகையில் வேறு எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை எனவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.

காரணம் என்ன?
நடிகை சஞ்சிதா எதனால் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தெரியாமல் உள்ள போலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் சார்ந்த அழுத்தங்களா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அவரது செல்போன் அழைப்புகள், சமூக வலைத்தள செயல்பாடுகளையும் ஆய்வு செய்வதாக போலிசார் தெரிவித்துள்ளனர். சஞ்சிதாவின் இந்த தவறான முடிவை நினைத்து ரசிகர்கள் கடும் வேதனையில் இருப்பதுடன், இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |