தமன்னாவிடம் தவறாக நடக்க முயன்ற பிரபல நடிகர்? பின்னர் நடந்தது என்ன?
இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா, தன்னிடம் தென்னிந்திய நடிகர் ஒருவர் கடுமையாக நடந்து கொண்டதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முன்னணி நடிகை
தமிழில் கேடி படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானார் தமன்னா, தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, பையா, சிறுத்தை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து தெலுங்கு உட்பட தென்னிந்திய படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.
தற்போது பாலிவுட் திரையுலகிலும், வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார், ஆனால் தென்னிந்திய சினிமாவில் இவருக்கு மார்க்கெட் அப்படியே தான் இருக்கிறது, காவாலா பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
பரபரப்பை கிளப்பிய சம்பவம்
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட தமன்னா, தான் சந்தித்த கசப்பான அனுபவங்கள் குறித்து பேசினார்.
அதில், தென்னிந்திய மொழி படத்தில் நடிக்கும் போது தன்னுடன் நடித்த சூப்பர்ஸ்டார் நடிகர் ஒருவர் கடுமையான நடந்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
குறித்த காட்சிகளில் நடிக்கும் அசௌகரியாக உணர்ந்ததாகவும், இவ்வாறு நடிக்க முடியாது என கூறியவுடன் ”நடிகையை மாற்றுங்கள்” என அந்த நடிகர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மறுநாள் குறித்த நடிகர் மன்னிப்பு கேட்டதாகவும், இதன்பின்னர் அந்த படத்தை நடித்துக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்
ஆனாலும் நடிகரின் பெயர் குறித்தோ, எந்த திரைத்துறையை சேர்ந்தவர் என்பது குறித்தோ தமன்னா எதுவும் கூறவில்லை, மர்மமாகவே இருக்கிறது.