வீட்டு குளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை.. சோகத்தில் திரையுலகம்
ஜப்பானை சேர்ந்த பிரபல நடிகை மிஹோ அவரது வீட்டு குளியல் தொட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை மிஹோ
ஜப்பான்- சாகு பகுதியில் பிறந்த நகாயாமா, கடந்த 1985 ஆம் ஆண்டு ”Maido Osawagase Shimasu” என்ற நாடகத்தின் நடித்து பிரபலமானார்.
இதனை தொடர்ந்து, ஜே-பாப் பாடலான "C" ஐ வெளியிட்டார். 80 மற்றும் 90களில் ஜே பாப் உச்சத்தில் இருந்த போது நகாயாமா பாடகியாக பெரும்புகழ் பெற்றார்.
கடந்த 1995 ஆம் ஆண்டு அவர் நடித்த “ லெட்டர்” திரைப்படம் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இவர், சுமாராக 22 ஜே பாப் ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.
பின்னர் கடந்த 1997 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான “டோக்கியோ வெதர்” படமும் பெரிதும் பேசப்பட்டது.
தொடர்ந்து திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் இசை ஆகியவற்றில் அவர் செய்த சாதனைகளுக்காகப் பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.
சடலமாக மீட்பு
இந்த நிலையில், நகாயாமா கடந்த வெள்ளிக்கிழமை ஒசாகாவில் ஒரு கிறிஸ்துமஸ் கச்சேரியில் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தார், ஆனால் உடல்நலப் பிரச்சினைகளால் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னர் சில வேலை நிமித்தமாக நியமனங்கள் இருந்த போதிலும் இன்னும் அவர் வரவில்லை என்பதால் உடன் வேலை செய்யும் ஒருவர் அவசர எண்ணை அழைத்துள்ளார். பொலிஸாருடன் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது குளியலறை தொட்டியில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். மருத்துவர்கள் அவரது இறப்பை உறுதி செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து டோக்கியோ போலீஸார் விசாரணை நடத்தி வருகிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறப்பின் காரணம் குறித்த மர்மம் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |