உலகப் பிரபலத்தின் பாதணி 2 லட்சம் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை!
உலகின் முக்கியமான தொழில்நுட்ப ஜாம்பவான்களில் ஒருவரான அமரர் ஸ்டீவ் ஜாப்ஸின் பாதணிகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பாதணி ஏல விற்பனை
இந்த பாதணி ஜோடியை நபர் ஒருவர் இரண்டு லட்சம் டொலர்களுக்கு மேல் கொடுத்து கொள்வனவு செய்துள்ளார். இவர் ஸ்டீவ் ஜோப்ஸ் எப்பள் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாதணிகள் சுமார் 60,000 டொலர்களுக்கு விற்பனை செய்யபடும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அதிர்ஸ்டவசமாக இந்த பாதணிகளை 218, 750 டொலர்கள் கொடுத்து ஒருவர் கொள்வனவு செய்துள்ளார். மேலும் இந்த பாதணிகள் கலிபோர்னியாவில் ஏலத்தில் விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
image - CNN-Julien's Auctions
பாதணியின் முக்கியத்துவங்கள்
தொழில்நுட்ப உலகின் பல சாதனைகளை படைத்துள்ள ஜொப்ஸ், கடந்த 2011ம் ஆண்டில் புற்று நோய் காரணமாக காலமானார். இந்த பாதணியில் ஸ்டீவ் ஜோப்ஸ்ன் கால் தடங்கள் அழுத்தமாக பதிந்துள்ளது எனவும் நீண்ட காலம் இதனை பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Birkenstock sandals ரக சாண்டல் பாதணிகள் இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரபல கூடைப்பந்தாட்ட ஜாம்பவான் மைக்கல் ஜோர்டனின் விளையாட்டு
காலணி ஜோடியொன்று கடந்த ஒக்ரோபர் மாதம் 1.47 மில்லியன்
டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.