விஜயாக மாறி குத்தாட்டம் போட்ட பிரபல கிரிக்கெட் வீரர்! வைரலாகும் வீடியோ
பிரபல நடிகரான விஜய்யின் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னர்.
அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வீரரான டேவிட் வார்னருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
குறிப்பாக அவர் இந்திய சினிமாக்களில் வரும் பாட்டுகளுக்கு மைதானத்தில் டான்ஸ் ஆடுவது எல்லாம் மிகவும் பிரசித்தமானது.
தற்போது விஜய்யின் தெறி படத்தில் இடம்பெற்ற "செல்லா குட்டி" பாடலில் டேவிட் வார்னர் இடம்பெறும் ஒரு வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று லைக்குகள் குவித்து வருகிறது.
இதற்குமுன் தர்பார் படத்தில் வரும் ரஜினி மற்றும் பாகுபலி படத்தில் வரும் பிரபாஸ் போல் மாறிய வீடியோக்களை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.