நடிகைகளின் திருமண ஆடை இத்தனை லட்சமா? டாப்பில் ஐஸ்வர்யா ராயாம்
இந்தியாவில் உள்ள டாப் நடிகைகள் தங்கள் திருமண உடைக்கு எத்தனை லட்சம் செலவு செய்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்வோம்.
நடிகைகளின் ஆடம்பர ஆடை
பொதுவாக திருமணத்தில் அணியும் ஆடைகள் என்றால் அது மிகவும் ஸ்பெஷல் என்று தான் கூற வேண்டும். நடிகை ஐஷ்வர்யா ராய் திருமண ஆடையின் விலை ரூ.75 லட்சம் ஆகும். இந்த புடவையில் தங்க பார்டர், உண்மையான தங்கத்தின் நூல் வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடிகை ஷில்பா ஷெட்டி திருமணத்தில் கட்டிய சிவப்பு நிற புடவை 50 லட்சம் ரூபாயாம். 8 ஆயிரம் ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் பதிக்கப்பட்டுள்ளதாம்.
அனுஷ்கா ஷர்மா தனது திருமணத்திற்கு அணிந்திருந்த லெஹங்காவின் விலை 30 லட்சம் ஆகும்.
பிரியங்கா சோப்ரா இரண்டு முறைகளில் திருமணம் செய்துள்ளா நிலையில், இரவில் சிந்தூர் சிவப்பு நிற லெஹங்காவை அணிந்துள்ளார். இதன் விலை 13 லட்சம் ஆகும்.
இதே போன்று நடிகை தீபிகா படுகோன் திருமணம் இத்தாலியில் நடைபெற்றது. இவரும் இரண்டு கலாச்சார முறையில் திருமணம் செய்து கொண்டதுடன், இவர் திருமணத்தன்று அணிந்த லெஹாங்காவின் விலை 13 லட்சம் ஆகும்.
நடிகை ஆலியா பாட் தனது திருமணத்தில் அணிந்திருந்த வெளிர் நிற ஆன்கன்சா புடவை ரூ.50 லட்சம் ஆகும்.
நடிகை சோனம் கபூர் திருமணத்தில் அணிந்திருந்த சிவப்பு நிற லெஹங்காவின் விலை ரூ.70 லட்சம் என்று கூறப்படுகின்றது.
நடிகை கத்ரீனா கைஃப் திருமணத்தின் போது சிவப்பு நிற சப்யசாச்சி லெஹங்காவை அணிந்துள்ளார். இவை 17 லட்சம் ரூபாய் ஆகும்.
நடிகை நயன்தாரா வெர்மில்லியன் சிவப்பு நிற புடவையை அணிந்திருந்தார். இதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |