பிரபல பிக் பாஸ் நடிகை நள்ளிரவில் மரணம்.. நடந்தது என்ன?
பிரபல பாலிவுட் நடிகையும், பிக் பாஸ் பிரபலமான ஷிபாலி ஜெரிவாலா நள்ளிரவில் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நடிகை ஷிபாலி ஜெரிவாலா
பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பிரபலமானவரும் 'கந்தா லகா" படத்தில் நடித்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற பிரபல நடிகை ஷிபாலி ஜெரிவாலா.
பிக்பாஸ் சீசன் 13ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். ஷெபாலிக்கு கடந்த 2015 திருமணம் நடைபெற்றது. 42 வயதான இவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை அளிப்பதற்கு முன்பே வழியில் உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், குடும்பத்தினர் இவரது மரணத்திற்கான காரணத்தை கூறவில்லை.
உடல் பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பரிசோதனை அறிக்கை வந்த பின்பே மரணத்திற்கான காரணம் தெரியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நடிகையின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலிசார் வீட்டில் வேலை செய்பவர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஷெபாலி ஜரிவாலாவின் மரணம் திரையுலகினரையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
