மீண்டும் மருத்துவமனையில் நடிகை குஷ்பு: சற்று முன்னர் வெளியான பதிவு
பிரபல நடிகை குஷ்பு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 1988ம் ஆண்டு வெளியான “தர்மத்தின் தலைவன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை குஷ்பு.
இவருக்கு அந்த காலத்திலேயே ரசிகர்கள் கோயில் கட்டினார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
இதனை தொடர்ந்து சினிமா, குடும்பம், அரசியல் என பலதுறையிலும் பிரசித்து பெற்றவராக இருந்து வருகிறார்.
பா.ஜ.க. கட்சியின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமானராக இருந்து வருகிறார்.
மீண்டும் மருத்துவமனையில் குஷ்பு
இந்நிலையில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில் “இடுப்பு எலும்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் முழுமையாக குணமாகும் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இதற்கு முன்னர் “அடினோவைரஸ்” என்ற தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகை குஷ்பு மருத்துவமனையில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
On the road to recovery! Underwent a procedure for my coccyx bone ( tail bone ) yet again. Hope it heals completely. ? pic.twitter.com/07GlQxobOI
— KhushbuSundar (@khushsundar) June 23, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |