பிரபல நடிகர் திடீர் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்
பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி
பிரபல தயாரிப்பாளர் எம்.ஆர்.சந்தானத்தின் மகனும் இயக்குனர் சந்தான பாரதியின் சகோதரருமான ஆர்.எஸ்.சிவாஜி(66). இவர் இன்று காலை மணியளவில் உயிரிழந்துள்ளார்.
ஆர். எஸ்.சிவாஜி கடந்த 1981 ஆம் ஆண்டு தன்னுடைய சகோதரர் சந்தான பாரதி இயக்கத்தில் வெளியான 'பன்னீர் புஷ்பங்கள்' திரைப்படத்தின் மூலம், குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பின்பு தனது எதார்த்தமான நடிப்பினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையில் நடித்து பிரபலமான இவர், பல சரியல்களிலும், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான டைம் என்ன பாஸ் வெப் தொடரிலும் நடித்திருந்தார்.
நடிகராக மட்டும் இன்றி, துணை இயக்குனர், சவுண்ட் டிசைனர், லைன் ப்ரொடியூசர், என பன்முக திறமையோடு விளங்கிய இவர், நேற்றைய தினம் விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.
அப்பொழுது ஆரோக்கியமாக இருந்த அவர், இன்று திடீரென உயிரிழந்துள்ளது ரசிகர்கள், பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |